Ramana Maharshi and who am i in tamil and English




நானார்?

Nāṉ-ār? or Nāṉ Yār?
(Who am I?)
Original Tamil prose by
Bhagavan Sri Ramana
with English translation by Michael James

Paragraph One

சகல ஜீவர்களும் துக்கமென்ப தின்றி எப்போதும் சுகமாயிருக்க விரும்புவதாலும், யாவருக்கும் தன்னிடத்திலேயே பரம பிரிய மிருப்பதாலும், பிரியத்திற்கு சுகமே காரண மாதலாலும், மனமற்ற நித்திரையில் தின மனுபவிக்கும் தன் சுபாவமான அச் சுகத்தை யடையத் தன்னைத் தானறிதல் வேண்டும். அதற்கு நானார் என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம்.
Since all living beings desire to be always happy without what is called misery, since for everyone the greatest love is only for oneself, and since happiness alone is the cause of love, [in order] to attain that happiness, which is one’s own [true] nature that is experienced daily in [dreamless] sleep, which is devoid of the mind, oneself knowing oneself is necessary. For that, jñāna-vicāra [knowledge-investigation] ‘who am I’ alone is the principal means.1

Paragraph Two

நானார்? ஸப்த தாதுக்களா லாகிய ஸ்தூல தேகம் நானன்று. சப்த, ஸ்பரிச, ரூப, ரஸ, கந்த மென்னும் பஞ்ச விஷயங்களையும் தனித்தனியே அறிகின்ற சுரோத்திரம், துவக்கு, சக்ஷுஸ், ஜிஹ்வை, கிராண மென்கிற ஞானேந்திரியங்க ளைந்தும் நானன்று. வசனம், கமனம், தானம், மல விசர்ஜனம், ஆனந்தித்தல் என்னும் ஐந்து தொழில்களையும் செய்கின்ற வாக்கு, பாதம், பாணி, பாயு,உபஸ்தம் என்னும் கன்மேந்திரியங்க ளைந்தும் நானன்று. சுவாஸாதி ஐந்தொழில்களையும் செய்கின்ற பிராணாதி பஞ்ச வாயுக்களும் நானன்று. நினைக்கின்ற மனமும் நானன்று. சர்வ விஷயங்களும் சர்வ தொழில்களு மற்று, விஷய வாசனைகளுடன் மாத்திரம் பொருந்தியிருக்கும் அஞ்ஞானமும் நானன்று. மேற்சொல்லிய யாவும் நானல்ல, நானல்ல வென்று நேதிசெய்து தனித்து நிற்கும் அறிவே நான்அறிவின் சொரூபம் சச்சிதானந்தம்.
Who am I? The sthūla dēha [the ‘gross’ or physical body], which is [composed] of sapta dhātus [the seven constituents, namely chyle, blood, flesh, fat, marrow, bone and semen], is not ‘I’. The five jñānēndriyas [sense organs], namely the ears, skin, eyes, tongue and nose, which individually [and respectively] know the five viṣayas[sense ‘domains’ or types of sense perception], namely sound, touch [texture and other qualities perceived by touch], form [shape, colour and other qualities perceived by sight], taste and smell, are also not ‘I’. The five karmēndriyas[organs of action], namely the voice, feet [or legs], hands [or arms], anus and genitals, which [respectively] do the five actions, namely speaking, walking, giving, defecation and [sexual] enjoyment, are also not ‘I’. The pañca vāyus[the five ‘winds’, ‘vital airs’ or metabolic forces], beginning with prāṇa [breath], which perform the five [metabolic] functions, beginning with respiration, are also not ‘I’. The mind, which thinks, is also not ‘I’. The ignorance [the absence of all dualistic knowledge] that is combined with only viṣaya-vāsanās [dispositions, propensities, tendencies, inclinations, impulses, desires, taste or liking to experience the objects of sensory perception] when all viṣayas[sensory perceptions] and all actions have ceased [as in sleep], is also not ‘I’. Having eliminated everything mentioned above as not ‘I’, not ‘I’, the aṟivu [knowledge, awareness or consciousness] that stands isolated alone is ‘I’The nature of [this] knowledge [‘I am’] is sat-cit-ānanda [being-consciousness-bliss].2

Paragraph Three

சர்வ அறிவிற்கும் சர்வ தொழிற்குங் காரண மாகிய மன மடங்கினால் ஜகதிருஷ்டி நீங்கும். கற்பித ஸர்ப்ப ஞானம் போனா லொழிய அதிஷ்டான ரஜ்ஜு ஞானம் உண்டாகாதது போல, கற்பிதமான ஜகதிருஷ்டி நீங்கினா லொழிய அதிஷ்டான சொரூப தர்சன முண்டாகாது.
If the mind, which is the cause of all [objective] knowledge and of all activity, subsides, jagad-dṛṣṭi [perception of the world] will cease. Just as knowledge of the rope, which is the base [that underlies and supports the imaginary appearance of a snake], will not arise unless knowledge of the imaginary snake ceases, svarūpa-darśana [true experiential knowledge of our own actual nature or real self], which is the base [that underlies and supports the imaginary appearance of this world], will not arise unless perception of the world, which is an imagination [or fabrication], ceases.3

Paragraph Four

மன மென்பது ஆத்ம சொரூபத்தி லுள்ள ஓர் அதிசய சக்தி. அது சகல நினைவுகளையும் தோற்றுவிக்கின்றது. நினைவுகளை யெல்லாம் நீக்கிப் பார்க்கின்றபோது, தனியாய் மனமென் றோர் பொருளில்லை; ஆகையால் நினைவே மனதின் சொரூபம். நினைவுகளைத் தவிர்த்து ஜகமென்றோர் பொருள் அன்னியமா யில்லை. தூக்கத்தில் நினைவுகளில்லை, ஜகமுமில்லை; ஜாக்ர சொப்பனங்களில் நினைவுகளுள, ஜகமும் உண்டு. சிலந்திப்பூச்சி எப்படித் தன்னிடமிருந்து வெளியில் நூலை நூற்று மறுபடியும் தன்னுள் இழுத்துக் கொள்ளுகிறதோ, அப்படியே மனமும் தன்னிடத்திலிருந்து ஜகத்தைத் தோற்றுவித்து மறுபடியும் தன்னிடமே ஒடுக்கிக்கொள்ளுகிறது. மனம் ஆத்ம சொரூபத்தினின்று வெளிப்படும்போது ஜகம் தோன்றும். ஆகையால், ஜகம் தோன்றும்போது சொரூபம் தோன்றாது; சொரூபம் தோன்றும் (பிரகாசிக்கும்) போது ஜகம் தோன்றாது. மனதின் சொரூபத்தை விசாரித்துக்கொண்டே போனால் தானே மனமாய் முடியும். ‘தான்’ என்பது ஆத்மசொரூபமே. மனம் எப்போதும் ஒரு ஸ்தூலத்தை யனுசரித்தே நிற்கும்; தனியாய் நில்லாது. மனமே சூக்ஷ்மசரீர மென்றும் ஜீவ னென்றும் சொல்லப்படுகிறது.
What is called ‘mind’ is an atiśaya śakti [an extraordinary or wonderful power] that exists in ātma-svarūpa [our actual self]. It projects [or causes the appearance of] all thoughts. When one sets aside all thoughts and sees, solitarily there is no such thing as ‘mind’; therefore thought alone is the svarūpa [the ‘own form’ or fundamental nature] of the mind. Excluding thoughts [or ideas], there is not separately any such thing as ‘world’. In sleep there are no thoughts, and [consequently] there is also no world; in waking and dream there are thoughts, and [consequently] there is also a world. Just as a spider spins out thread from within itself and again draws it back into itself, so the mind projects the world from within itself and again dissolves it back into itself. When the mind comes out from ātma-svarūpa, the world appears. Therefore when the world appears, svarūpa [our ‘own form’ or actual self] does not appear [as it really is]; when svarūpa appears (shines) [as it really is], the world does not appear. If one goes on investigating the nature of the mind, oneself alone will turn out to be [what now seems to be] the mind. What is [here] called ‘oneself’ (tāṉ) is only ātma-svarūpa. The mind stands only by always going after [attaching itself to] a gross object [a physical body]; solitarily it does not stand. The mind alone is described as sūkṣma śarīra [the ‘subtle body’] and as jīva [the ‘soul’ or personal self].4

Paragraph Five

இந்தத் தேகத்தில் நான் என்று கிளம்புவது எதுவோ அஃதே மனமாம். நானென்கிற நினைவு தேகத்தில் முதலில் எந்தவிடத்திற் றோன்றுகின்ற தென்று விசாரித்தால், ஹ்ருதயத்தி லென்று தெரிய வரும். அதுவே மனதின் பிறப்பிடம். நான், நான் என்று கருதிக்கொண்டிருந்தாலுங்கூட அவ்விடத்திற் கொண்டுபோய் விட்டுவிடும். மனதில் தோன்றும் நினைவுக ளெல்லாவற்றிற்கும் நானென்னும் நினைவே முதல் நினைவு. இது எழுந்த பிறகே ஏனைய நினைவுகள் எழுகின்றன. தன்மை தோன்றிய பிறகே முன்னிலை படர்க்கைகள் தோன்றுகின்றன; தன்மை யின்றி முன்னிலை படர்க்கைக ளிரா.
What rises in this body as ‘I’, that alone is the mind. If [one] investigates in what place the thought called ‘I’ rises at first in the body, [one] will come to know that [it rises] in the heart [the innermost core of oneself, which is what one essentially is]. That alone is the birthplace of the mind. Even if [one] remains thinking ‘I, I’, it will take and leave [one] in that place. Of all the thoughts that appear [or arise] in the mind, the thought called ‘I’ alone is the first[primal, basic, original or causal] thought. Only after this rises do other thoughts rise. Only after the first person appears do the second and third persons appear; without the first person the second and third persons do not exist.5

Paragraph Six

நானார் என்னும் விசாரணையினாலேயே மன மடங்கும். நானார் என்னும் நினைவு மற்ற நினைவுகளை யெல்லா மழித்துப் பிணஞ்சுடு தடிபோல் முடிவில் தானு மழியும். பிற வெண்ணங்க ளெழுந்தா லவற்றைப் பூர்த்தி பண்ணுவதற்கு எத்தனியாமல் அவை யாருக் குண்டாயின என்று விசாரிக்க வேண்டும். எத்தனை எண்ணங்க ளெழினு மென்ன? ஜாக்கிரதையாய் ஒவ்வோ ரெண்ணமும் கிளம்பும்போதே இது யாருக்குண்டாயிற்று என்று விசாரித்தால் எனக்கென்று தோன்றும். நானார் என்று விசாரித்தால் மனம் தன் பிறப்பிடத்திற்குத் திரும்பிவிடும்; எழுந்த வெண்ணமு மடங்கிவிடும். இப்படிப் பழகப் பழக மனத்திற்குத் தன் பிறப்பிடத்திற் றங்கி நிற்கும் சக்தி யதிகரிக்கின்றது. சூக்ஷ்மமான மனம், மூளை இந்திரியங்கள் வாயிலாய் வெளிப்படும் போது ஸ்தூலமான நாமரூபங்கள் தோன்றுகின்றன; ஹிருதயத்தில் தங்கும்போது நாமரூபங்கள் மறைகின்றன. மனத்தை வெளிவிடாமல் ஹிருதயத்தில் வைத்துக்கொண்டிருப்பதற்குத்தான் ‘அகமுகம்’ அல்லது ‘அந்தர்முகம்’ என்று பெயர். ஹ்ருதயத்திலிருந்து வெளிவிடுவதற்குத்தான் ‘பகிர்முக’ மென்று பெயர். இவ்விதமாக மனம் ஹ்ருதயத்திற் றங்கவே, எல்லா நினைவுகளுக்கும் மூலமான நான் என்பது போய் எப்பொழுது முள்ள தான்மாத்திரம் விளங்கும். நான் என்னும் நினைவு கிஞ்சித்து மில்லா விடமே சொரூபமாகும். அதுவே ‘மௌன’ மெனப்படும். இவ்வாறு சும்மா விருப்பதற்குத்தான் ‘ஞான திருஷ்டி’ என்று பெயர். சும்மா விருப்பதாவது மனத்தை ஆன்மசொரூபத்தில் லயிக்கச் செய்வதே. அன்றி, பிறர் கருத்தறிதல், முக்கால முணர்தல், தூர தேசத்தில் நடப்பன வறிதல் ஆகிய இவை ஞான திருஷ்டி யாகமாட்டா.
Only by [means of] the investigation who am I will the mind subside [or cease to exist]. The thought who am I [that is, the urge to investigate oneself], having destroyed all other thoughts, will itself in the end be destroyed like a corpse-burning stick [a stick that is used to stir a funeral pyre to ensure that the corpse is burnt entirely]. If other thoughts rise, without trying to complete them it is necessary to investigate to whom they have occurred. However many thoughts rise, what [does it matter]? As soon as each thought appears, if [one] vigilantly investigates to whom it has occurred, it will be clear that [it is] to me. If [one thus] investigates who am I, the mind will return to its birthplace [the innermost core of one’s being, which is the source from which it arose]; [and since one thereby refrains from attending to it] the thought which had risen will also subside. When [one] practises and practises in this manner, to the mind the power to stand firmly established in its birthplace will increase [that is, by repeatedly practising turning our attention towards our mere being, which is the birthplace of our mind, our mind’s ability to remain as mere being will increase]. When the subtle mind goes out through the portal of the brain and sense organs, gross names and forms [the thoughts that constitute the mind and the objects that constitute this world] appear; when it remains in the heart [the core of our being], names and forms disappear. Only to [this state of] retaining the mind in the heart without letting it go outwards [does] the name ‘ahamukham’ [‘I-facing’ or self-attentiveness] or ‘antarmukham’ [‘inward-facing’, introspection or introversion] [refer]. Only to [the state of] letting it go outwards [does] the name ‘bahirmukham’ [‘outward-facing’ or extroversion] [refer]. Only when the mind remains firmly established in the heart in this manner will what is called ‘I’ [the ego], which is the root [base, foundation or origin] of all thoughts, depart [disappear or cease] and will the ever-existing self alone shine. The place [space or state] devoid of even the slightest thought called ‘I’ is svarūpa [our ‘own form’ or actual self]. That alone is called ‘mauna’ [silence]. Only to [the state of] thus just being [does] the name ‘jñāna-dṛṣṭi’ [‘knowledge-seeing’, the experience of true knowledge] [refer]. What ‘just being’ (summā-v-iruppadu) is is only making the mind dissolve in ātma-svarūpa [our own actual self]. Besides [this state of just being], knowing the thoughts of others, knowing the three times [past, present and future], and knowing what is happening in distant places cannot be jñāna-dṛṣṭi.6

Paragraph Seven

யதார்த்தமா யுள்ளது ஆத்மசொரூப மொன்றே. ஜக ஜீவ ஈச்வரர்கள், சிப்பியில் வெள்ளிபோல் அதிற் கற்பனைகள். இவை மூன்றும் ஏககாலத்தில் தோன்றி ஏககாலத்தில் மறைகின்றன. சொரூபமே ஜகம்; சொரூபமே நான்; சொரூபமே ஈச்வரன்; எல்லாம் சிவ சொரூபமாம்.
What actually exists is only ātma-svarūpa [our own essential self]. The world, soul and God are kalpanaigaḷ[imaginations, fabrications, mental creations or illusory superimpositions] in it, like [the imaginary] silver [seen] in a shell. These three appear simultaneously and disappear simultaneously. Svarūpa [our ‘own form’ or actual self] alone is the world; svarūpa alone is ‘I’ [our ego, soul or individual self]; svarūpa alone is God; everything is śiva-svarūpa[our actual self, which is śiva, the absolute and only truly existing reality].7

Paragraph Eight

மனம் அடங்குவதற்கு விசாரணையைத் தவிர வேறு தகுந்த உபாயங்களில்லை. மற்ற உபாயங்களினால் அடக்கினால் மனம் அடங்கினாற்போ லிருந்து, மறுபடியும் கிளம்பிவிடும். பிராணாயாமத்தாலும் மன மடங்கும்; ஆனால் பிராண னடங்கியிருக்கும் வரையில் மனமு மடங்கியிருந்து, பிராணன் வெளிப்படும்போது தானும் வெளிப்பட்டு வாசனை வயத்தா யலையும். மனத்திற்கும் பிராணனுக்கும் பிறப்பிட மொன்றே. நினைவே மனத்தின் சொரூபம். நானென்னும் நினைவே மனத்தின் முதல் நினைவு; அதுவே யகங்காரம். அகங்கார மெங்கிருந்து உற்பத்தியோ, அங்கிருந்துதான் மூச்சும் கிளம்புகின்றது. ஆகையால் மன மடங்கும்போது பிராணனும், பிராண னடங்கும்போது மனமு மடங்கும். ஆனால் சுழுத்தியில் மன மடங்கி யிருந்தபோதிலும் பிராண னடங்கவில்லை. தேகத்தின் பாதுகாப்பின் நிமித்தமும் தேகமானது மரித்து விட்டதோ வென்று பிறர் ஐயுறாவண்ணமும் இவ்வாறு ஈச்வர நியதியால் ஏற்பட்டிருக்கிறது. ஜாக்கிரத்திலும் சமாதியிலும் மன மடங்குகிறபோது பிராண னடங்குகிறது. பிராணன் மனத்தின் ஸ்தூல ரூபமெனப்படும். மரணகாலம் வரையில் மனம் பிராணனை உடலில் வைத்துக்கொண்டிருந்து, உடல் மரிக்குங் காலத்தில் அதனைக் கவர்ந்துகொண்டு போகின்றது. ஆகையால் பிராணாயாமம் மனத்தை யடக்க சகாயமாகுமே யன்றி மனோநாசஞ் செய்யாது.
For the mind to subside [permanently], except vicāraṇā [self-investigation] there are no other adequate means. If made to subside by other means, the mind will remain as if subsided, [but] will emerge again. Even by prāṇāyāma[breath-restraint], the mind will subside; however, [though] the mind remains subsided so long as the breath remains subsided, when the breath emerges [or becomes manifest] it will also emerge and wander under the sway of [its] vāsanās [propensities, inclinations, impulses or desires]. The birthplace both of the mind and of the prāṇa [the breath and other life-processes] is one. Thought alone is the svarūpa [the ‘own form’] of the mind. The thought called ‘I’ alone is the first thought of the mind; it alone is the ego. From where the ego arises, from there alone the breath also starts. Therefore when the mind subsides the prāṇa also [subsides], [and] when the prāṇa subsides the mind also subsides. However in sleep, even though the mind has subsided, the breath does not subside. It is arranged thus by the ordinance of God for the purpose of protecting the body, and so that other people do not wonder whether that body has died. When the mind subsides in waking and in samādhi [any of the various types of mental absorption that result from yōgic or other forms of spiritual practice], the prāṇa subsides. The prāṇa is said to be the gross form of the mind. Until the time of death the mind keeps the prāṇa in the body, and at the moment the body dies it [the mind] grabs and takes it [the prāṇa] away. Therefore prāṇāyāma is just an aid to restrain the mind [or to make it subside temporarily], but will not bring about manō-nāśa [the annihilation of the mind].8
Translator’s note: The three sentences that I have highlighted in red in this paragraph were not in the original essay version written by Sri Ramana, but were interpolated afterwards, either in the mid-1930s or later. They were not in the manuscript of this essay handwritten by Sri Ramana, which was reproduced in The Mountain PathJune 1993, pp. 44-47, nor were they included either in the essay version in the first edition (1931) of ஸ்ரீ ரமண நூற்றிரட்டு (Śrī Ramaṇa Nūṯṟiraṭṭu, his Tamil collected works) or in the 1932 editions of either the thirty or the twenty-eight question-and-answer versions. I also could not find them in any of the versions published prior to that that I have seen, or in any of Sivaprakasam Pillai’s notebooks. The earliest edition in which I have seen them included was the 1936 editon of the twenty-eight question-and-answer, so it was probably added first in that version and later in this essay version.
According to the central teachings of Sri Ramana, the body and world are both mental creations, so they seem to exist only so long as we experience them, and hence they do not exist when our mind is subsided in sleep. For those who are willing to accept this teaching, the idea that ‘in sleep, even though the mind has subsided, the breath does not subside’ is not an issue, because if the existence of the body (and hence of its breathing) is dependent upon the activity of the mind, it is clear that in sleep ‘when the mind subsides the prāṇa also [...] subsides’, as Sri Ramana stated explicitly in the previous sentence. Therefore, if these three interpolated sentences were something that Sri Ramana actually said, he presumably said so as a concession in reply to someone who was unable or unwilling to accept (even tentatively as a possibility) his teaching that the body, prāṇa, world and everything else seem to exist only in the self-deluded view of the mind, and hence cease to exist whenever the mind has subsided, as in dreamless sleep.

Paragraph Nine

பிரணாயாமம் போலவே மூர்த்தித்தியானம், மந்திரஜபம், ஆகார நியம மென்பவைகளும் மனத்தை அடக்கும் சகாயங்களே. மூர்த்தித்தியானத்தாலும், மந்திரஜபத்தாலும் மனம் ஏகாக்கிரத்தை யடைகிறது. சதாசலித்துக் கொண்டிருக்கும் யானையின் துதிக்கையில் ஒரு சங்கிலியைக் கொடுத்தால் அவ்யானை எப்படி வேறொன்றையும் பற்றாம லதையே பற்றிக் கொண்டு செல்லுமோ, அப்படியே சதாசலித்துக் கொண்டிருக்கும் மனமும், அதனை ஏதோ ஒரு நாமம் அல்லது ரூபத்திற் பழக்கினால் அதையே பற்றிக் கொண்டிருக்கும். மனம் அளவிறந்த நினைவுகளாய் விரிகின்றபடியால் ஒவ்வொரு நினைவும் அதிபலவீனமாகப் போகின்றது. நினைவுக ளடங்க வடங்க ஏகாககிரத்தன்மை யடைந்து, அதனாற் பலத்தை யடைந்த மனத்திற்கு ஆத்மவிசாரம் சுலபமாய் சித்திக்கும். எல்லா நியமங்களிலுஞ் சிறந்த மித ஸாத்விக ஆகார நியமத்தால் மனத்தின் சத்வ குணம் விருத்தியாகி, ஆத்மவிசாரத்திற்கு சகாய முண்டாகிறது.
Just like prāṇāyāmamūrti-dhyāna [meditation upon a form of God], mantra-japa [repetition of sacred words such as a name of God] and āhāra-niyama [restriction of diet, particularly the restriction of consuming only vegetarian food] are only aids that restrain the mind [but will not bring about its annihilation]. By both mūrti-dhyāna and mantra-japathe mind gains one-pointedness [or concentration]. Just as, if [someone] gives a chain in the trunk of an elephant, which is always moving [swinging about trying to catch hold of something or other], that elephant will proceed grasping it without grasping anything else, so indeed the mind, which is always moving [wandering about thinking of something or other], will, if trained in [the practice of thinking of] any one name or form, remain grasping it [without thinking unnecessary thoughts about anything else]. Because the mind spreads out as innumerable thoughts [thereby scattering its energy], each thought becomes extremely weak. For the mind which has gained one-pointedness when thoughts shrink and shrink [that is, which has gained one-pointedness due to the progressive reduction of its thoughts] and which has thereby gained strength, ātma-vicāra [self-investigation, which is the state of self-attentive being] will be easily accomplished. By mita sāttvika āhāra-niyama [the restraint of consuming only a moderate quantity of sattva-conducive food], which is the best among all restrictions, the sattva-guṇa [the quality of ‘being-ness’, calmness and clarity] of the mind will increase and [thereby] help will arise for self-investigation.9

Paragraph Ten

தொன்றுதொட்டு வருகின்ற விஷயவாசனைகள் அளவற்றனவாய்க் கடலலைகள் போற் றோன்றினும் அவையாவும் சொரூபத்யானம் கிளம்பக் கிளம்ப அழிந்துவிடும். அத்தனை வாசனைகளு மொடுங்கி, சொரூபமாத்திரமா யிருக்க முடியுமா வென்னும் சந்தேக நினைவுக்கு மிடங்கொடாமல், சொரூபத்யானத்தை விடாப்பிடியாய்ப் பிடிக்க வேண்டும். ஒருவன் எவ்வளவு பாபியாயிருந்தாலும், ‘நான் பாபியா யிருக்கிறேனே! எப்படிக் கடைத்தேறப் போகிறே’ னென்றேங்கி யழுதுகொண்டிராமல், தான் பாபி என்னு மெண்ணத்தையு மறவே யொழித்து சொரூபத்யானத்தி லூக்க முள்ளவனாக விருந்தால் அவன் நிச்சயமா யுருப்படுவான்.
Even though viṣaya-vāsanās [inclinations or desires to experience things other than oneself], which come from time immemorial, rise [as thoughts] in countless numbers like ocean-waves, they will all be destroyed when svarūpa-dhyāna [self-attentiveness] increases and increases. Without giving room even to the doubting thought ‘Is it possible to dissolve so many vāsanās and be [or remain] only as svarūpa [my own actual self]?’ it is necessary to cling tenaciously to self-attentiveness. However great a sinner a person may be, if instead of lamenting and weeping ‘I am a sinner! How am I going to be saved?’ he completely rejects the thought that he is a sinner and is zealous [or steadfast] in self-attentiveness, he will certainly be reformed [transformed into the true ‘form’ of thought-free self-conscious being].10

Paragraph Eleven

மனத்தின்கண் எதுவரையில் விஷயவாசனைக ளிருக்கின்றனவோ, அதுவரையில் நானா ரென்னும் விசாரணையும் வேண்டும். நினைவுகள் தோன்றத் தோன்ற அப்போதைக்கப்போதே அவைகளையெல்லாம் உற்பத்திஸ்தானத்திலேயே விசாரணையால் நசிப்பிக்க வேண்டும். அன்னியத்தை நாடாதிருத்தல் வைராக்கியம் அல்லது நிராசை; தன்னை விடாதிருத்தல் ஞானம். உண்மையி லிரண்டு மொன்றே. முத்துக்குளிப்போர் தம்மிடையிற் கல்லைக் கட்டிக்கொண்டு மூழ்கிக் கடலடியிற் கிடைக்கும் முத்தை எப்படி எடுக்கிறார்களோ, அப்படியே ஒவ்வொருவனும் வைராக்கியத்துடன் தன்னுள் ளாழ்ந்து மூழ்கி ஆத்மமுத்தை யடையலாம். ஒருவன் தான் சொரூபத்தை யடையும் வரையில் நிரந்தர சொரூப ஸ்மரணையைக் கைப்பற்றுவானாயின் அதுவொன்றே போதும். கோட்டைக்குள் எதிரிக ளுள்ளவரையில் அதிலிருந்து வெளியே வந்துகொண்டே யிருப்பார்கள். வர வர அவர்களையெல்லாம் வெட்டிக்கொண்டே யிருந்தால் கோட்டை கைவசப்படும்.
As long as viṣaya-vāsanās exist in the mind, so long the investigation who am I is necessary. As and when thoughts arise, then and there it is necessary to annihilate them all by vicāraṇā [investigation or vigilant self-attentiveness] in the very place from which they arise. Being without attending to [anything] other [than oneself] is vairāgya[dispassion] or nirāśā [desirelessness]; being without leaving [separating from or letting go of] self is jñāna [true knowledge]. In truth [these] two [desirelessness and true knowledge] are only one. Just as a pearl-diver, tying a stone to his waist and submerging, picks up a pearl which lies in the bottom of the ocean, so each person, submerging [beneath the surface activity of their mind] and sinking [deep] within themself with vairāgya [freedom from desire to experience anything other than self], can attain the pearl of self. If one clings fast to uninterrupted svarūpa-smaraṇa[self-remembrance] until one attains svarūpa [one’s own actual self], that alone [will be] sufficient. So long as enemies are within the fort, they will continue coming out from it. If [one] continues cutting down [or destroying] all of them as and when they come, the fort will [eventually] come into [one’s] possession.11

Paragraph Twelve

கடவுளும் குருவும் உண்மையில் வேறல்லர். புலிவாயிற் பட்டது எவ்வாறு திரும்பாதோ, அவ்வாறே குருவினருட்பார்வையிற் பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவரே யன்றி யொருக்காலும் கைவிடப்படார்; எனினும், குரு காட்டிய வழிப்படி தவறாது நடக்க வேண்டும்.
God and guru are in truth not different. Just as what has been caught in the jaws of a tiger will not return, so those who have been caught in the glance of guru’s grace will surely be saved by him and will never instead be forsaken; nevertheless, it is necessary to walk unfailingly along the path that guru has shown.12

Paragraph Thirteen

ஆன்மசிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்று மிடங்கொடாமல் ஆத்மநிஷ்டாபரனா யிருப்பதே தன்னை ஈசனுக் களிப்பதாம். ஈசன்பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும், அவ்வளவையும் அவர் வகித்துக்கொள்ளுகிறார். சகல காரியங்களையும் ஒரு பரமேச்வர சக்தி நடத்திக்கொண்டிருகிறபடியால், நாமு மதற் கடங்கியிராமல், ‘இப்படிச் செய்யவேண்டும்; அப்படிச் செய்யவேண்டு’ மென்று ஸதா சிந்திப்பதேன்? புகை வண்டி சகல பாரங்களையும் தாங்கிக்கொண்டு போவது தெரிந்திருந்தும், அதி லேறிக்கொண்டு போகும் நாம் நம்முடைய சிறிய மூட்டையையு மதிற் போட்டுவிட்டு சுகமா யிராமல், அதை நமது தலையிற் றாங்கிக்கொண்டு ஏன் கஷ்டப்படவேண்டும்?
Being completely absorbed in ātma-niṣṭhā [self-abidance], giving not even the slightest room to the rising of any thought other than ātma-cintanā [thought of oneself or self-attentiveness], alone is giving oneself to God. Even though we place whatever amount of burden upon God, that entire amount he will bear. Since one paramēśvara śakti[supreme ruling power or power of God] is driving all activities [everything that happens in this world], instead of yielding to it why should we always think, ‘it is necessary to act in this way; it is necessary to act in that way’? Though we know that the train is going bearing all the burdens, why should we who go travelling in it suffer bearing our small luggage on our head instead of remaining happily leaving it placed on that [train]?13

Paragraph Fourteen

சுகமென்பது ஆத்மாவின் சொரூபமே; சுகமும் ஆத்மசொரூபமும் வேறன்று. ஆத்மசுகம் ஒன்றே யுள்ளது; அதுவே ஸத்யம். பிரபஞ்சப்பொருள் ஒன்றிலாவது சுகமென்பது கிடையாது. அவைகளிலிருந்து சுகம் கிடைப்பதாக நாம் நமது அவிவேகத்தால் நினைக்கின்றோம். மனம் வெளியில் வரும்போது துக்கத்தை யனுபவிக்கிறது. உண்மையில் நமது எண்ணங்கள் பூர்த்தியாகும்போதெல்லாம் அது தன்னுடைய யதாஸ்தானத்திற்குத் திரும்பி ஆத்மசுகத்தையே யனுபவிக்கிறது. அப்படியே தூக்கம், சமாதி, மூர்ச்சை காலங்களிலும், இச்சித்த பொருள் கிடைக்கிறபோதும், வெறுத்த பொருளுக்கு கேடுண்டாகும் போதும், மனம் அந்தர்முகமாகி ஆத்மசுகத்தையே யனுபவிக்கிறது. இப்படி மனம் ஆத்மாவை விட்டு வெளியே போவதும், உள்ளே திரும்புவதுமாக ஓய்வின்றி யலைகிறது. மரத்தடியில் நிழல் சுகமா யிருக்கிறது. வெளியில் சூரியவெப்பம் கொடுமையா யிருக்கிறது. வெளியி லலையு மொருவன் நிழலிற் சென்று குளிர்ச்சி யடைகிறான். சிறிது நேரத்திற்குப் பின் வெளிக்கிளம்பி வெப்பத்தின் கொடுமைக் காற்றாது, மறுபடியும் மரத்தடிக்கு வருகின்றான். இவ்வாறு நிழலினின்று வெயிலிற் போவதும், வெயிலினின்று நிழலிற் செல்வதுமாயிருக்கிறான். இப்படிச் செய்கிறவன் அவிவேகி. ஆனால் விவேகியோ நிழலைவிட்டு நீங்கான். அப்படியே ஞானியின் மனமும் பிரம்மத்தை விட்டு நீங்குவ தில்லை. ஆனால் அஞ்ஞானியின் மனமோ பிரபஞ்சத்தி லுழன்று துக்கப்படுவதும், சிறிது நேரம் பிரம்மத்திற்குத் திரும்பி சுக மடைவதுமா யிருக்கிறது. ஜக மென்பது நினைவே. ஜகம் மறையும்போது அதாவது நினைவற்ற போது மனம் ஆனந்தத்தை யனுபவிக்கின்றது; ஜகம் தோன்றும் போது அது துக்கத்தை யனுபவிக்கின்றது.
What is called happiness is only svarūpa [the ‘own form’ or actual nature] of ātmā [self]; happiness and ātma-svarūpa[our own actual self] are not different. Ātma-sukha [the happiness of self] alone exists; that alone is real. Happiness is not obtained from any of the objects of the world. We think that happiness is obtained from them because of our lack of discrimination. When [our] mind comes out, it experiences unhappiness. In truth, whenever our thoughts [or wishes] are fulfilled, it [our mind] turns back to its proper place [the core of our being, our real self, which is the source from which it arose] and experiences only the happiness of self. In the same way, at times of sleep, samādhi[a state of intense contemplation or absorption of mind] and fainting, and when a desired thing is obtained, and when termination occurs to a disliked thing [that is, when our mind avoids or is relieved from some experience that it dislikes], [our] mind becomes introverted and experiences only the happiness of self. In this way [our] mind wavers about without rest, going outwards leaving self, and [then] turning [back] inwards. At the foot of a tree the shade is delightful. Outside the heat of the sun is severe. A person who is wandering outside is cooled by going into the shade. Emerging outside after a short while, he is unable to bear the heat, so he again comes to the foot of the tree. In this way he continues, going from the shade into the sunshine, and going [back] from the sunshine into the shade. A person who acts in this manner is someone lacking in discrimination. But a person of discrimination will not leave the shade. Similarly, the mind of a jñāni [a person of true self-knowledge] does not leave brahman [the fundamental and absolute reality, which is our own actual self and the sole substance of everything]. But the mind of an ajñāni [a person lacking true self-knowledge] continues to undergo misery by roaming about in the world, and to obtain happiness by returning to brahman for a short while. What is called the world is only thought [because like the ‘world’ that we experience in a dream, all that we experience as the ‘world’ in this waking state is nothing but a series of mental images, ideas or thoughts that we have formed in our mind by our power of imagination]. When the world disappears, that is, when thought ceases, [our] mind experiences happiness; when the world appears, it experiences unhappiness.14

Paragraph Fifteen

இச்சா ஸங்கல்ப யத்நமின்றி யெழுந்த ஆதித்தன் சன்னிதி மாத்திரத்தில் காந்தக்கல் அக்கினியைக் கக்குவதும், தாமரை மலர்வதும், நீர் வற்றுவதும், உலகோர் தத்தங் காரியங்களிற் பிரவிருத்தித்து இயற்றி யடங்குவதும், காந்தத்தின் முன் ஊசி சேஷ்டிப்பதும் போல ஸங்கல்ப ரகிதராயிருக்கும் ஈசன் சன்னிதான விசேஷ மாத்திரத்தால் நடக்கும் முத்தொழில் அல்லது பஞ்சகிருத்தியங்கட் குட்பட்ட ஜீவர்கள் தத்தம் கர்மானுசாரம் சேஷ்டித் தடங்குகின்றனர். அன்றி, அவர் ஸங்கல்ப ஸஹித ரல்லர்; ஒரு கருமமு மவரை யொட்டாது. அது லோககருமங்கள் சூரியனை யொட்டாததும், ஏனைய சதுர்பூதங்களின் குணாகுணங்கள் வியாபகமான ஆகாயத்தை யொட்டாததும் போலும்.
Just as in the mere presence of the sun, which rose without icchā [wish, desire or liking], saṁkalpa [volition or intention] or yatna [effort or exertion], a crystal stone [or magnifying lens] will emit fire, a lotus will blossom, water will evaporate, and people of the world will engage in [or begin] their respective activities, do [those activities] and subside [or cease being active], and [just as] in front of a magnet a needle will move, [so] jīvas [living beings], who are caught in [the finite state governed by] muttoṙil [the threefold function commonly attributed to God, namely the creation, sustenance and dissolution of the world] or pañcakṛtyas [the five functions commonly attributed to God, namely creation, sustenance, dissolution, concealment and grace], which happen due to nothing but the special nature of the presence of God, who is saṁkalpa rahitar [one who is devoid of any volition or intention], move [busy themselves, perform activities, make effort or strive] and subside [cease being active, become still or sleep] in accordance with their respective karmas [that is, in accordance not only with their prārabdha karma or destiny, which impels them to do whatever actions are necessary in order for them to experience all the pleasant and unpleasant things that they are destined to experience, but also with their karma-vāsanās, their inclinations or impulses to desire, think, speak and act in particular ways, which impel them to make effort to experience pleasant things and to avoid experiencing unpleasant things]. Nevertheless, he [God] is not saṁkalpa sahitar [one who is connected with or possesses any volition or intention]; even one karma does not adhere to him [that is, he is not bound or affected by any karma or action whatsoever]. That is like world-actions [the actions happening here on earth] not adhering to [or affecting] the sun, and [like] the qualities and defects of the other four elements [earth, water, air and fire] not adhering to the all-pervading space.15

Paragraph Sixteen

எந்நூலிலும் முக்தி யடைவதற்கு மனத்தை யடக்க வேண்டுமென்று சொல்லப்பட் டுள்ளபடியால், மனோநிக்ரகமே நூல்களின் முடிவான கருத்து என் றறிந்துகொண்ட பின்பு நூல்களை யளவின்றிப் படிப்பதாற் பயனில்லை. மனத்தை யடக்குவதற்குத் தன்னை யாரென்று விசாரிக்க வேண்டுமே யல்லாமல் எப்படி நூல்களில் விசாரிப்பது? தன்னைத் தன்னுடைய ஞானக்கண்ணாற்றானே யறிய வேண்டும். ராமன் தன்னை ராமனென்றறியக் கண்ணாடி வேண்டுமா? ‘தான்’ பஞ்ச கோசங்களுக்குள் ளிருப்பது; நூல்களோ அவற்றிற்கு வெளியி லிருப்பவை. ஆகையால், பஞ்ச கோசங்களையும் நீக்கி விசாரிக்க வேண்டிய தன்னை நூல்களில் விசாரிப்பது வீணே. பந்தத்தி லிருக்கும் தான் யாரென்று விசாரித்து தன் யதார்த்த சொரூபத்தைத் தெரிந்துகொள்வதே முக்தி. சதாகாலமும் மனத்தை ஆத்மாவில் வைத்திருப்பதற்குத் தான் ‘ஆத்மவிசார’ மென்று பெயர்; தியானமோ தன்னை ஸச்சிதானந்த பிரம்மமாக பாவிப்பது. கற்றவை யனைத்தையும் ஒருகாலத்தில் மறக்க வேண்டிவரும்.
Since in every [spiritual] text it is said that for attaining mukti [liberation] it is necessary to make the mind subside, after knowing that manō-nigraha [restraint, subjugation or destruction of the mind] is the ultimate intention [or purpose] of [such] texts, there is no benefit [to be gained] by studying texts without limit. For making the mind subside it is necessary to investigate oneself [in order to experience] who [one really is], [but] instead [of doing so] how [can one experience oneself by] investigating in texts? It is necessary to know oneself only by one’s own eye of jñāna [true knowledge, that is, by one’s own selfward-turned awareness]. Does [a person called] Raman need a mirror to know himself as Raman? ‘Self’ is within the pañca-kōśas [the ‘five sheaths’ that seem to cover and obscure what we really are, namely our physical body, our prāṇa or life-processes, our mind, our intellect and the seeming darkness or ignorance of sleep]; conversely, texts are outside them. Therefore investigating in texts [hoping to be able thereby to experience] oneself, whom it is necessary to investigate [with an inward-turned attention] having removed [set aside, abandoned or detached] all the pañca-kōśas, is useless [or unprofitable]. [By] investigating who is oneself who is in bondage, knowing one’s yathārtha svarūpa [own actual self] alone is mukti [emancipation]. The name ‘ātma-vicāra’ [refers] only to [the practice of] always keeping the mind in [or on] ātmā [oneself]; conversely, dhyāna [meditation] is imagining oneself to be sat-cit-ānanda brahman [the absolute reality, which is being-consciousness-bliss]. At one time it will become necessary to forget all that has been learnt.16

Paragraph Seventeen

குப்பையைக் கூட்டித் தள்ளவேண்டிய ஒருவன் அதை யாராய்வதா லெப்படிப் பயனில்லையோ அப்படியே தன்னை யறியவேண்டிய ஒருவன் தன்னை மறைத்துகொண்டிருக்கும் தத்துவங்க ளனைத்தையும் சேர்த்துத் தள்ளிவிடாமல் அவை இத்தனையென்று கணக்கிடுவதாலும், அவற்றின் குணங்களை ஆராய்வதாலும் பயனில்லை. பிரபஞ்சத்தை ஒரு சொப்பனத்தைப்போ லெண்ணிக்கொள்ள வேண்டும்.
Just as one who needs to sweep up and throw away rubbish [would derive] no benefit by analysing it, so one who needs to know oneself [will derive] no benefit by calculating that the tattvas, which are concealing oneself, are this many, and analysing their qualities, instead of collectively rejecting all of them. It is necessary to consider the world [which is believed to be an expansion or manifestation of such tattvas] like a dream.17

Paragraph Eighteen

ஜாக்ரம் தீர்க்கம், சொப்பனம் க்ஷணிக மென்பது தவிர வேறு பேதமில்லை. ஜாக்ரத்தில் நடக்கும் விவகாரங்க ளெல்லாம் எவ்வளவு உண்மையாகத் தோன்றுகின்றனவோ அவ்வளவு உண்மையாகவே சொப்பனத்தில் நடக்கும் விவகாரங்களும் அக்காலத்திற் றோன்றுகின்றன. சொப்பனத்தில் மனம் வேறொரு தேகத்தை யெடுத்துக்கொள்ளுகிறது. ஜாக்ரம் சொப்பன மிரண்டிலும் நினைவுகளும் நாமரூபங்களும் ஏககாலத்தில் நிகழ்கின்றன.
Except that waking is dīrgha [long lasting] and dream is kṣaṇika [momentary or lasting for only a short while], there is no other difference [between these two mind-created states]. To the extent to which all the vyavahāras [doings, activities, affairs or occurrences] that happen in waking seem [at this present moment] to be real, to that [same] extent even the vyavahāras that happen in dream seem at that time to be real. In dream the mind takes another body [to be itself]. In both waking and dream thoughts and names-and-forms [the objects of the seemingly external world] occur in one time [that is, simultaneously].18

Paragraph Nineteen

நல்ல மன மென்றும் கெட்ட மன மென்று மிரண்டு மனங்களில்லை. மன மொன்றே. வாசனைகளே சுப மென்றும் அசுப மென்று மிரண்டுவிதம். மனம் சுபவாசனை வயத்தாய் நிற்கும்போது நல்ல மன மென்றும், அசுபவாசனை வயத்தாய் நிற்கும்போது கெட்டமன மென்றும் சொல்லப்படும். பிறர் எவ்வளவு கெட்டவர்களாய்த் தோன்றினும் அவர்களை வெறுத்தலாகாது. விருப்பு வெறுப்புக ளிரண்டும் வெறுக்கத் தக்கன. பிரபஞ்ச விஷயங்களி லதிகமாய் மனத்தை விடக் கூடாது. சாத்தியமானவரையில், அன்னியர் காரியத்திற் பிரவேசிக்கக் கூடாது. பிறருக் கொருவன் கொடுப்ப தெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்ளுகிறான். இவ் வுண்மையை யறிந்தால் எவன்தான் கொடா தொழிவான்?
There are not two [classes of] minds, namely a good [class of] mind and a bad [class of] mind. The mind is only one. Only vāsanās [dispositions, propensities or impulses] are of two kinds, namely śubha [good or agreeable] and aśubha[bad or disagreeable]. When [a person’s] mind is under the sway of śubha-vāsanās [agreeable propensities] it is said to be a good mind, and when it is under the sway of aśubha-vāsanās [disagreeable propensities] a bad mind. However bad other people may appear to be, disliking them is not proper [or appropriate]. Likes and dislikes are both fit [for one] to dislike [or renounce]. It is not appropriate to let [one’s] mind [dwell] excessively on worldly matters. To the extent possible, it is not appropriate to intrude in other’s affairs. All that one gives to others one is giving only to oneself. If [everyone] knew this truth, who indeed would refrain from giving?19

Paragraph Twenty

தானெழுந்தால் சகலமு மெழும்; தானடங்கினால் சகலமு மடங்கும். எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு. மனத்தை யடக்கிக்கொண் டிருந்தால், எங்கே யிருந்தாலு மிருக்கலாம்.
If oneself [the ego or mind] rises, everything rises; if oneself subsides [or ceases], everything subsides [or ceases]. To whatever extent being subsided [or humble] we behave, to that extent there is goodness [or virtue]. If [we] are restraining [curbing, subduing, condensing, contracting or reducing] mind, wherever [we] may be [we] can be [or wherever we may be let us be].20